பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்க பவ ஸாகரதாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமஸிவாய
தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம்.
பொதுப்பொருள்:
தன் மீது பக்தி கொண்டோரை அரவணைக்கும் பரமேஸ்வரனே நமஸ்காரம். பிறப்பு – இறப்பு என்ற நோயால் ஏற்படும் பயத்தை விலக்குபவனே நமஸ்காரம். துஷ்டர்களை தண்டிப்பவனே, துயரங்கள் நிறைந்த சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்க வைப்பவனே நமஸ்காரம். ஜோதி வடிவானவனே, பக்தர்களின் நாம கீர்த்தனத்தால் ஆனந்தம் கொண்டு நர்த்தனமாடும் சீலனே நமஸ்காரம். வறுமைப் பிணியைப் போக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் ஈசனே நமஸ்காரம்.