மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா முழு பலத்துடன் பழைய பார்முக்கு விரைவில் திரும்புவார் என பர்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அந்த அணியின் வீரர் லசித் மலிங்கா அந்தளவுக்கு சோபிக்கவில்லை.
இது குறித்து பேட்டியளித்துள்ள மும்பை வீரர் பர்தீவ் பட்டேல், மலிங்கா காயங்களிலிருந்து விடுபட்டு வருகிறார்.
அவர் தற்போது சிறந்த பார்மில் இல்லாதது குறித்து நாங்கள் கவலைபடவில்லை.
அவர் விரைவில் முழு பலத்துடன் பார்முக்கு திரும்புவார், தங்கள் அணி தனிப்பட்ட வீரரை மட்டும் சார்ந்து இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பை அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஜெயவர்தனே அந்த பதவிக்கு தகுதியானவர்.
டி20 போட்டிகளில் அவருக்கு அதிக அனுபவம் உள்ளதால், அது எந்தளவுக்கு கடினமானது என அவர் புரிந்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.