வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட பீர் சிறந்தது : ஆய்வில் தகவல்

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.