எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கூறியுள்ளார்.
ஒபாமாவின் பதவிக் காலம் முடிந்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு, மிஷேல் ஒபாமா முதல்முறையாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.
Orlando-வில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு வாழ்க்கை அனுபவம் எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொண்டார்.
கல்வி, பொருளாதார சமத்துவம் உள்ளிட்ட துறைகளில் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்காக தொடர்ந்து பணியாற்றப் போவதாகக் குறிப்பிட்டார்.
அதேசமயம் எதிர்காலத்தில் அதிபர் பதவிக்கோ அல்லது வேறு ஏதேனும் அரசியல் பதவிகளுக்கோ போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் மிஷேல் ஒபாமா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.