இன்றைய ராசி பலன்கள் 01.05.2017

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் அமைதி நிலவும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறி யாகும். உறவினர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இனிமையான நாள்.

  • கன்னி

    கன்னி: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.

  • துலாம்

    துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத் துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறு வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தாய்வழி உற வினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.