இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவினைப் பெற்றுத் தருவதாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர்க் கட்சி தலைவர் சமபந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று(30) மாலை அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள்,
இன்றய தினம் எங்களது போராட்டம் 69 வைத்து நாள் என்பதையும் எங்களுடைய தொழில் உரிமையின் தேவைப்பாடு சம்பந்தமாகவும் தெளிவுபடுத்தியுள்ளோம்
அதற்கு அவர் இரண்டு வாரங்களில் ஒரு சாதகமான முடிவினை பெற்று தருவோம் என்ற வாக்குறுதியினை வழங்கியிருக்கின்றார். ஆகவே எதிர்க் கட்சி தலைவரின் வாக்குறுதி எமக்கு சாதகமா இருக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.