சாரதிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் அபாயம்

மே தினத்தில் அரசியல் கட்சிகள் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்த உள்ளதன் காரணமாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று அமுலாவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே தின பாதுகாப்பு பணிகளில், சுமார் 7 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பு, கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் விசேட போக்குவரத்து எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தக் கூடாது என பெரும்பாலான இடங்களில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அத்துடன், போக்குவரத்து சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.