வான்வெளியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! கொழும்பு, யாழ் நகரங்களில் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழமைக்கு மாறாக நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் அதிக வெப்பமான காலநிலை அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று பதிவாகியுள்ளது. அதன் வெப்பநிலை 38 செல்சியஸ்சாக காணப்பட்டதாக திணைக்களத்தின் அதிகாரி உதேனி வீரசிங்க தெரிவித்துள்ளனர்.

பொதுவாக அநுராதபுரத்தில் காணப்படும் வெப்பநிலையில் அளவு 34.3 என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் கொழும்பில் நேற்று 32.3 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், கொழும்பில் காணப்பட வேண்டிய வெப்பத்தின் அளவு 31.8 செல்சியஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண குடா நாட்டில் 34.3 செல்சியஸ் வெப்பமும், நுவரெலியாவில் 23.5 செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

இதேவேளை முகில்களில் நீராவியாகுவது அதிகம் எனவும் காற்று நிலைமை குறைவடைந்தமை காரணமாகவும் கடும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இந்த நிலைமை இம்மாத நடுப்பகுதி வரை தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.