திகார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன்!

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவை மே 15ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், 5 நாள் பொலிஸ் காவல் முடிந்து தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை விசாரித்த டெல்லி நீதிமன்றம், தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவை மே 15ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.