போரின் பின்னர் வடக்கு மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
போரின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் எதற்கும் தீர்வு வழங்கப்படவில்லை.
காணாமல் போனவர்களின் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை.
வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் இழக்கப்பட்ட பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு எட்டப்படும் வரையில் வடக்கில் சுதந்திரமான ஒர் மே தினக் கூட்டத்தை நடத்த முடியாது என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.