முன்னாள் புலி செயற்பாட்டாளர்கள் தமிழரசுக் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் புலி செயற்பாட்டாளர்களை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி நேற்றைய தினம் தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் இந்த விடயம் குறித்து கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னாள் புலிச் செயற்பாட்டாளர்கள் அரசியல் செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முன்னாள் புலி செயற்பாட்டாளர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்து கொள்ள விடுத்த கோரிக்கை கடந்த 2015ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டிருந்தது என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.