நல்லாட்சி அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தலங்கமவில் நடைபெற்ற மே தினக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
உழைக்கும் மக்களின் அனைத்து உரிமைகளையும் நல்லாட்சி அரசாங்கம் முடக்கி வருகின்றது.
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் நிச்சயம் தோல்வி ஏற்படும் என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது.
தேர்தல் நடத்தினால் அரசாங்கத்தின் மெய்யான முகம் வெளிப்பட்டு விடும் என்ற காரணத்தினால் தேர்தல்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது.
இந்த நாடே துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றது.
பிரதேச சபைகள் இன்று பாரிய குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளன.
முடிந்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தி வெற்றியீட்டிக் காண்பிக்கட்டும் என தினேஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளார்.