அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்!

அக்னி-5 ஏவுகணையின் இறுதி கட்ட சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது.
இந்த ஏவுகணை சோதனை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் விரைவில் ராணுவ பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ராணுவ பலத்தில் இறுமாப்புடன் செயல்பட்டு வரும் சீனாவுக்கு இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை மிகுந்த அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.
வல்லரசு தகுதியில் உள்ள சீனாவுக்கு இந்த ஏவுகணை சோதனை பெரும் அச்சத்தை தந்துள்ளது. அதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
x27-1482824249-agni-v-long-range-ballistic-missile-1.jpg.pagespeed.ic_._wjFb70lyT அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! x27 1482824249 agni v long range ballistic missile 1

அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஏவுகணை 8,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டதாக இருப்பதாக சீன பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, சீனாவின் எந்த மூலையையும் தாக்கும் வல்லமையை அக்னி-5 மூலமாக இந்தியாவுக்கு கிடைத்திருப்பதாக அவர்கள் கூறி உள்ளனர்.

ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போல ஒரு அக்னி-5 ஏவுகணையில் பல இலக்குகளை குறி வைத்து அணுகுண்டுகளை பொருத்தி செலுத்த முடியும்.
இதுவும் சீனாவுக்கு பெரும் உதறலை தந்துள்ள விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஒரு அக்னி-5 ஏவுகணையை தடுக்க தவறினால், சீனாவின் ராணுவ பலத்தையே நொடியில் ஆட்டம் காண வைத்து விடும் வாய்ப்பு இருப்பதே இந்த அச்சத்துக்கு காரணம்.
x27-1482824282-agni-v-long-range-ballistic-missile-5.jpg.pagespeed.ic_.4wEfjltA4I அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! x27 1482824282 agni v long range ballistic missile 5

துப்பாக்கியில் இருந்து குண்டு செல்வதைவிட அதிவேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது. எனவே, இதனை எதிரி நாட்டு ரேடார்கள் கண்டுபிடிப்பதும், அதனை வழிமறித்து தாக்கி அழிப்பதும் பெரும் சிரமம். இதுவும் சீனாவுக்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கும்.
இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 50 டன் எடையும் கொண்டது. இந்த ஏவுகணையில் 1 டன் அணு ஆயுதத்தை ஏவ முடியும்.
எனவே, எதிரி நாட்டுக்கு மிகப்பெரிய உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் என்பதும் சீனாவின் கவலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
x27-1482824299-agni-v-long-range-ballistic-missile-7.jpg.pagespeed.ic_.qhoyY77TvV அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! x27 1482824299 agni v long range ballistic missile 7

அக்னி-5 ஏவுகணையானது சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவே இந்தியா உருவாக்கி இருப்பதாக சொல்லப்பட்டாலும், இதனை ஐரோப்பிய நாடுகள் வரைக்கும் செலுத்த முடியும். அதாவது, கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது.
இந்த சக்திவாய்ந்த ஏவுகணையை வாகனங்கள் மூலமாக நாட்டின் எந்த ஒரு மூலைக்கும் எடுத்துச் சென்று எளிதாக ஏவ முடியும். அதாவது, நாட்டின் எல்லையில் வைத்து ஏவ முடியும் என்பதால், எதிரி நாட்டு இலக்குகளுக்குள் அதிகபட்ச தூரம் பாய்ந்து செல்லும். மேலும், எந்த இடத்திலிருந்து ஏவப்படுகிறது என்பதையும் எதிரி நாடுகள் கணிக்க முடியாது.

x27-1482824317-agni-v-long-range-ballistic-missile-9.jpg.pagespeed.ic_.8jxsaTQYYv அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! அக்னி-5 ஏவுகணை என்னென்ன செய்யும் தெரியுமா? சீனா அலறுவதற்கு இவைதான் காரணம்! x27 1482824317 agni v long range ballistic missile 9

அக்னி-5 ஏவுகணையை ஏவுவதற்கு விசேஷ உத்தரவு தேவைப்படுகிறது. அதாவது, பிரதமர் கட்டளையிட்டால் மட்டுமே இந்த சக்திவாய்ந்த அக்னி-5 ஏவுகணையை ஏவ முடியும். இது நாட்டின் ராணுவ பலத்தை வெகுவாக அதிகரிக்கச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அத்துடன், 5,000 கிமீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பெற்றிருக்கும் 4வது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளிடம் மட்டும்தான் இதுபோன்ற ஏவுகணைகள் உள்ளன.
ஏற்கனவே ராணுவ பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அக்னி-1 ஏவுகணை 700 கிமீ தூரம் வரையிலும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிமீ தூரம் வரையிலும், அக்னி-3 ஏவுகணை 2,500 கிமீ தூரம் வரையிலும் பாய்ந்து செல்லும், அக்னி-4 ஏவுகணை 3,500 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.