இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். காயம் காரணமாக அவர் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். அஸ்வினிடம் பேட்டிங் திறமை அதிக அளவில் உள்ளது.
கொல்கத்தா அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், அந்த அணி கேப்டன் காம்பீர் திடீரென தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கினார். ஒன்றிரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், மற்ற போட்டிகளில் குறைந்த பந்தில் அதிக ரன்கள் குவித்து விடுகிறார். இவரது அதிரடி ஆட்டம் கொல்கத்தா அணிக்கு உதவிகரமாக இருக்கிறது.
இதனால் டுவிட்டரில் ஒரு ரசிகர், சுனில் நரைனை போல் நீங்களும் அடுத்த வருடம் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்குவீர்களா? என்று கேட்டார்.
இதற்கு அஸ்வின், ‘‘நான் விரும்புவது ஒன்று. ஆனால் அணியின் கேப்டன், நான் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவதை விரும்ப வேண்டும்’’ என்று பதில் அளித்துள்ளார்.