உழைக்கும் தமிழர்கள் தான் நாட்டில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர் என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டம் அம்பாறையில் – ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேசிய இனம் ஒன்று இன்னும் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போது அந்த தேசிய இனத்தின் விடுதலைக்காக நாம் போராடுகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விடுதலை தற்போது வர இருக்கின்ற புதிய அரசியலமைப்புச் சட்டத்தினூடாக வரவேண்டும் என்பதே எமது கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிகாரப்பகிர்வின் மூலம் தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.