-
மேஷம்
மேஷம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். அழகு, இளமைக் கூடும். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தல் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சிப் பெருகும் நாள்.
-
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒருவித படபடப்பு, தயக்கம் வந்து செல்லும். கணுக்கால் வலிக்கும். மற்றவர் களைப் பற்றி வீண் விமர்
சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். -
சிம்மம்
சிம்மம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். சகோதர வகை
யில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி
யுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள். -
கன்னி
கன்னி: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் ஒத்துழைப் பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
துலாம்
துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள் வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
-
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மையும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங் களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
மீனம்
மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.