இலங்கையில் தரமான ஊடகத்துறையை மேம்படுத்த முடியும்! ஐரோப்பிய ஒன்றியம்

பொது மக்களுக்கான தகவல்களை அறியும் விடயம் காரணமாக இலங்கையில் தரமான ஊடகத்துறையை மேம்படுத்தமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இலங்கை வந்துள்ள தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொது மக்களுக்கான தகவல்களை அறியும் விடயம் காரணமாக இலங்கையில் தரமான ஊடகத்துறையை மேம்படுத்தமுடியும். இதற்கு சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டமரன் டொட் கொம் என்ற இணையத்தளங்கள், உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு இடையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெகட்டமரன் இணையம், பேர்லினில் இயங்கும் ஊடக ஒத்துழைப்பு மையம், இலங்கையின் ஊடக நிறுவகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் ஆகியவற்றினால் நடத்தப்படுகிறது.