அரசாங்கம் முடியுமானால் உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்திக்காட்டட்டும் என்று கூட்டு எதிரணி சவால் விடுத்துள்ளது.
இந்த சவாலை இன்று (02) கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊடகம் ஒன்றின் மூலம் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் தங்களது மேதின சனத்திரளைக்கண்டு திருப்பிக்கொண்டிருக்குமானால் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் சவாலை ஏற்றே நேற்று காலிமுகத்திடலில் பாரிய சனத்திரளுடன் மக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த நிலையில் அரசாங்கம் தமது சவாலை ஏற்று உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஸ குறித்த ஊடகத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.