கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பிரதான தீர்வை வரியற்ற கடைகளுக்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு நிறுவனங்கள் பெறுமதியான விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இப்படியொரு ஏல பெறுமதிக்காக விலைக்கோரல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினால் சில நெருக்கடிகள் காணப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்த கேள்விபத்திர அழைப்பிற்கு 5 நிறுவனங்கள் இணங்கியுள்ளன. இருந்த போதிலும் இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே தங்கள் விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பது சில சூழ்ச்சிகளின் முடிவாக இது இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் அந்த நிறுவனங்களின் கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் தமது தொழில்களை இழக்கும் அபாயம் உள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.