அணு ஆயுதங்களை உலகம் முழுவதும் அனுப்பும் வட கொரியா: எந்நேரத்திலும் வெடிக்கலாம்!!

பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகில் நடக்கும் பல்வேறு விடயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் அவுஸ்ரேலியாவின் think-tank நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் கடத்துகிறது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை சார்ந்தே வட கொரியாவுக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் உள்ளதா என மதிப்பிட முடியும்.

தங்களால் இது முடியும் என காட்ட தான் வட கொரியா சீனா வழியாக மீன் பிடி கப்பல் மற்றும் நீர் மூழ்கி கப்பல் மூலம் அணு ஆயுதங்களை கடத்தி உலக நாடுகளுக்கு எடுத்து செல்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கப்பலின் கண்டெயினர்களில் அணு ஆயுதங்கள் கடத்தபடுவதாகவும், கப்பல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதால் அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

வட கொரியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை கடத்தி சென்று அதை அங்கு வெடிக்க செய்வதாக பயமுறுத்தினால், தங்களை தாக்க நினைக்கும் அமெரிக்கா அதிலிருந்து பின் வாங்கும் என வட கொரியா நினைக்கிறது.

உலகம் முழுவதும் 17 மில்லியன் கண்டெய்னர்கள் கப்பல்களில் உலா வருவதால் அணு ஆயுதங்கள் உள்ள கண்டெய்னர்களை கண்டுபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்தே வட கொரியா இதை செய்வதாக think-tank அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

வட கொரியாவை குறைத்து மதிப்பிட்டால் மிக பெரிய உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் உலகம் சந்திக்ககூடும் எனவும் think-tank எச்சரித்துள்ளது.