எனது தோல்விக்கு எப்.பி.ஐ. மற்றும் ரஷ்யாவின் தலையீடுகளே காரணம் – ஹிலாரி கிளிண்டன்

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஹிலாரி கிளிண்டன், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 5 மாதங்களுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக எதை கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹிலாரி ,”என் பிரசாரத்தில் குறைகள் இருந்தன. ஆனால், அதிபர் தேர்தலில் நான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால், எப்.பி.ஐ திடீர் அறிவிப்பு, விக்கிலீக்ஸ் மற்றும் ரஷ்ய தலையீடு ஆகியவையே என் வெற்றிக்கு பாதகம் விளைவித்தன” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அந்த அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்காக புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு குடிமகளாக தன்னுடைய பணியை நாட்டுக்கு சிறப்பாக செய்ய தயாராக இருப்பதாகவும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.