வடகொரியா- அமெரிக்கா போர் பதற்றம் நிலவும் சூழலில் தமிழ்நாட்டின் திருப்பூரில் சிவன்மலை கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைக்கபட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது
தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள சிவன்மலையில் சுப்ரமணியசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் கனவில் சிவன்மலை கடவுள் வந்து ஒரு பொருளை கொடுக்க உத்தரவிடுவாராம்.
உடனே அதுகுறித்து சுவாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை பூக்களை வைத்து சுவாவியிடம் உத்தரவு கேட்கப்படும்.
அதில் வெள்ளை பூ வந்தால் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து அதற்கு பூஜை செய்யப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த பெட்டியில் சங்கிலி வைக்கபட்டது. அதன் பின்னர் தான் சசிகலாவின் சிறை தண்டனை உறுதியானது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த நீலகண்ட மகரிஷி என்பவர், முருகன் தனது கனவில் வந்து உலக உருண்டையை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க சொன்னதாக கூறியுள்ளார்.
இதையடுத்து உலக உருண்டை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தற்போது வைக்கபட்டுள்ளது.
சிவாச்சாரியார்கள் கூறுகையில், ஹேவிளம்பி-யின் பெயர் விளக்கத்தில் போராட்டங்கள், மரணங்கள் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடகொரியா, அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் உலகக்கு நன்மை நடக்கவும் வாய்ப்புள்ளது எனவும் கூறுகிறார்கள்.