புலிகளுக்கு நரிகள் தலைமை தாங்குவதா? தமிழரசுக் கட்சியிடம் முன்னாள் போராளிகள் கேள்வி

புலிகளுக்கு நரிகள் தலைமை தாங்க நினைப்பது வேடிக்கையானது என ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் அரசியல் அரங்கில் போராளிகளது அரசியல் பிரவேசம் தொடர்பில் நாம் கூட்டமைப்பை சந்தித்தபோது நாங்கள் உங்களுக்கு பயங்கரவாதிகளாக தெரிந்தோம். ஆனால் இன்று போராளிகளை தமிழரசு கட்சியின் ஊடாக அரசியல் மயப்படுத்துவதாக அறிவித்திருப்பது உங்களது அரசியல் கபடத்தனங்களில் ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம்.

நீங்கள் அழைப்பதாயின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினூடாக எமை அழைத்திருக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து புலிகளுக்கு நரிகள் தலைமைதாங்க நினைப்பது வேடிக்கையானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலில் கூட்டமைப்பை பதிவு செய்யுங்கள். அங்கத்துவ கட்சிகளை மதித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள். உட்கட்சி ஜனநாயகத்தை மதியுங்கள்.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் பங்குதாரரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியியை எந்தவிதமான பாகுபாடுமின்றி இனைத்து பலம்பெற்ற தமிழ்த் தேசியமாக கூட்டமைப்பு பலமடையுமாயின் தமிழர் உரிமை தொடர்பில் இதய சுத்தியுடன் காத்திரமாக செயற்படுவீர்களானால் நாங்கள் அரசியலுக்கு களத்திற்கு வரவேண்டிய தேவையே இருக்காது.

அதைவிடுத்து எங்களை வைத்து உங்களை வெள்ளையடித்து கொள்வதை வன்மையாக கண்டிக்கின்றோம். சிங்கங்கள் வேட்டையாடப்பட்டாலும் காட்டிற்கு வேட்டைக்காரன் ராஜா ஆக முடியாது என்பதனை

தமிழரசு கட்சிக்கு பகிரங்கமாக சொல்லிக்கொள்கிறோம் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.