-
மேஷம்
மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாயமடை வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப் போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத் தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
-
கடகம்
கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். உற்சாகமான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பூரம் நட்சத்திரக்காரர்கள் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத் தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். செலவினங்கள் அதிகரிக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவு
கள் இருக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள். -
துலாம்
துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெருங்கிய நண்பரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர் களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் நன்மைகள் உண்டாகும் நாள்.
-
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற் றமும் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
-
கும்பம்
கும்பம்: பிள்ளைகள் கேட் டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியா பாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.
-
மீனம்
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.