ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
ஹபரணை சினமன் லொட்ஜ் ஹோட்டலில் நாளை காலை 9.00 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பாக உள்ளது. ஒன்பது மாகாணங்களினதும் முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாண சபைகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஹபரணை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி நாளை அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார்.
இதேவேளை இதுவரை காலமும் கொழும்பிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்புக் கமராக்கள் அனுராதபுர நகரிலும் ஸ்தாபிக்கப்பட உள்ளன.
முழு அனுராதபுரம் நகரையும் கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இந்த கண்காணிப்பு பாதுகாப்பு கமராக்களை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.