நாடாளுமன்றத்தில் புதிய சாதனையை ஏற்படுத்திய ஐ.தே.கவின் உறுப்பினர்

ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் குறைகளை முன்வைத்த சாதனையை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஏற்படுத்தியுள்ளார்.

அவர் நேற்று பொது மக்களின் 38 முறைப்பாடுகளை சபையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன் மூலம் ஏற்கனவே அவர் கடந்த மார்ச்சில் ஏற்படுத்திய 33 முறைப்பாடுகள் என்ற சாதனையை அவரே தற்பொழுது முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார 20 முறைப்பாடுகளை ஒரேநாளில் முன்வைத்துள்ளதுடன், காமினி லொக்குகே 18 முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.