நடிகர் பிரதீப் கொலையா? வலுக்கும் சந்தேகங்கள்!!

சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நடிகர் பிரதீபின் உடலில் ரத்த காயங்கள் உள்ளதால் தற்கொலை வழக்கை மர்ம மர்ணமாக எடுத்துக் கொண்ட பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமங்கலி என்னும் தமிழ்தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரதீப். இவர் ஏராளமான தெலுங்கு தொடர்களிலும் நடித்துள்ளார்.

பிரதீப் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் சடலத்தை பொலிசார் ஆராய்ந்த போது அவர் தலையிலும், உடம்பிலும் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

மேலும், பிரதீப் தூக்கில் தொங்கிய அறையின் படுக்கை மற்றும் தரையில் ரத்த கறைகள் படிந்திருந்தன.

அதுமட்டுமில்லாமல், வீட்டில் இருந்த பொருட்கள் உடைந்து தாறுமாறாக சிதறி கிடந்ததுடன், மேஜையில் மது பாட்டில்களும் இருந்தன.

இதனால் இது கொலையாக இருக்குமோ என சந்தேகப்பட்ட பொலிசார் இது குறித்து பிரதீபின் மனைவி நடிகை பவானி மற்றும் அவர்கள் வீட்டில் இரண்டு மாதங்களாக தங்கியிருந்த உறவுக்கார இளைஞர் ஷிரவண் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும், பவானி தனது வாட்ஸப்பில் ஷிரவண் புகைப்படத்தை வைத்திருந்ததாகவும், அது பிரதீப்புக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாவனி கூறுகையில், பிரதீப்புக்கும் எனக்கும் அடிக்கடி சின்ன சண்டைகள் நடக்கும்.

ஆனால் அதை உடனே மறந்து விடுவோம். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஷிரவண் கூறுகையில், பிரதீப் வீட்டில் அவர் அனுமதியோடு தான் நான் தங்கினேன். அதை போய் தவறாக பேசுகிறார்கள் என கூறியுள்ளார்.

இதனிடையில் பிரதீப் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் அவர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.