தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பசில்,மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தான் எந்த பதவியிலும் இல்லை.எனது குடும்பத்தினர் அமெரிக்காவில் உள்ளனர் எனவே எனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய மாட்டேன்.
ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்காகவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பசில் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் இலங்கையில் எந்தவொரு தேர்தலிலும் பங்குப்பற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரட்டை குடியுரிமை பெற்றிருந்த கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.