பழிவாங்கும் ஜெ ஆன்மா: சாந்தி பூஜைகளுக்கு தயாரான சசிகலா கோஷ்டி

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதிமுகவையும், தமிழகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவரத் துடித்த சசிகலா கோஷ்டி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆளை விடுங்கடா சாமி என கதறும் அளவு வழக்குகள் பாய்ந்து வருகின்றன, கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் புலம்பி தவிக்கின்றனர்.

தொடர்ந்து அசம்பாவிதம் நடந்துகொண்டே இருப்பதால் சாந்தி பூஜை செய்ய திட்டமிட்டுள்ளதாம் சசிகலா கோஷ்டி.

ஜெயலலிதாவின் ஆஸ்தான் நம்பூதிரிகளை அழைத்து வந்து போயஸ் கார்டன் இல்லம் மற்றும் கொடநாடு பங்களாவில் பூஜை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

இருப்பினும் ஜெயலலிதாவின் ஆன்மா தங்களை ஏதும் செய்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம் நம்பூதிரிகள்.