அப்பல்லோ வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சசிகலா முடிவு!!

ஓபிஎஸ் அணி தன்னை கொலைக்காரியாக சித்தரித்து வருவதற்கு பதிலடியாக அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த வீடியோவை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த பின்னர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.

அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அப்பல்லோ வீடியோவை வெளிட வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இதில் ஜெயலலிதா மரணம் குறித்து அவர் பேசுவார் என சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

மேலும், இதுகுறித்து சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.

இதைகேட்டதும் கொந்தளித்த சசிகலா எனக்கு கொலைக்காரி பட்டம் கட்டிய ஓபிஎஸ்-க்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என ஆவேசப்பட்டாராம்.

ஜெயலலிதா அப்பல்லோ வீடியோவை மக்கள் பார்த்தால் பதறிவிடுவார்கள் என்று தான் இத்தனை நாள் அதை வெளியிடாமல் இருந்தேன்.

ஆனால், இனியும் கொலைகாரி பட்டத்தை நான் சுமக்க விரும்பவில்லை எனவும் தனது கணவர் நடராஜனிடம் இருக்கும் அப்பல்லோ வீடியோவை வெளிட உள்ளதாகவும் சசிகலா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தனக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் உறவினர் மகன் விவேக்குக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.