எம்.ஜெ.திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. மாதவன் இன்று மாவட்டச் செயலாளர்களுக்கான நேர்காணலை இன்று தொடங்கியுள்ளார்.
வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தோஷிகார்டனில் உள்ள முதல் தளத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை மாதவன் நேற்று அறிவித்தார். அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு நாளை நேர்காணல் நடைபெற உள்ளது.
இதேப் போன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களுக்கும் 8ம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களுக்கும் 9ம் தேதி திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 10ம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது.
மதுரை, விருதுநகர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு 11ம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது.