பிரபல நடிகையும், ஐக்கிய தேசிய கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினருமான நதீஷா ஹேமமாலியை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நடிகை நதீஷாவின் பேஸ்புக் பக்கத்தில் நதீஷா பதிவிட்டுள்ளார்.
விரைவில் நதீஷா, மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.