அரசாங்கத்திற்கு 3700 கோடி இழப்பு?

அரசாங்கம் 3700 கோடி ரூபாய் வரி வருமானத்தை இழக்கும் நிலையில் உள்ளதாக உள்நாட்டு வருமான திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கன வரவு செலவுத் திட்டத்திற்காக வரி யோசனைகள் செயற்படுத்த முடியாமல் போனமையினால் இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி யோசனையை செயற்படுத்த வேண்டுமாயின் அதனை வர்த்தமானியில் உள்ளடக்கி சட்டமாக அறிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே வரி சேகரிக்கும் செயற்பாட்டிற்காக உள்நாட்டு வருமான திணைக்களத்திற்கு அதிகாரம் கிடைக்கும்.

நிதி வருடம் ஆரம்பமாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னமும் வரி யோசனை வர்த்தமானியில் உள்ளடக்கப்படவில்லை எனவும், இவ்வாறான நிலையில் ஒன்று நீண்ட கால வரலாற்றில் ஏற்படவில்லை என்றும் குறித்த தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.