ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய இதை செய்யுங்க: கருணாஸ் தடாலடி!!

அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகள் நீடித்தால் தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் எனவும், அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வேண்டும் எனவும் கருணாஸ் கூறியுள்ளார்.

தமிழநாட்டின் திருவாடனை தொகுதியிலிருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் கருணாஸ் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளார்.

இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஜெயலலிதா வளர்த்த கட்சி இரண்டாகப் பிளவுபடக்கூடாது. ஆட்சி நான்கு ஆண்டுகள் பூர்த்தியானால் தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும் என கூறியுள்ளார்.

மேலும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி இருவரும் சந்தித்து பேசி ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் தொடர வேண்டும் எனவும் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.