ஜெ. கால்களை வெட்டி பாதாள அறையை திறந்தாரா சசிகலா? என்ன சொல்கிறார் பொன்னையன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்து போயஸ் தோட்டத்தின் பாதாள அறையில் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய், பணம் நகைகளை சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்தனர் என்று தகவல்கள் பரவி வருவதாக ஓபிஎஸ் அணியின் பொன்னையன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணமடைந்து 5 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவில்லை. நீதி கேட்டு நெடும்பயணம் கிளம்பி விட்டார் ஓபிஎஸ். காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பொன்னையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

போயஸ் தோட்டத்து பாதாள அறை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் ரகசிய பாதாள அறை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது போயஸ் கார்டன் ரகசிய அறையில் ரொக்கமாக 25000 கோடி ரூபாய் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவின் திட்டம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆபரண நகைகளை கைப்பற்ற அவரது தோழி சசிகலா மாஸ்டர் பிளான் ஒன்றை அரங்கேற்றி அதனை தினகரன் மூலம் கச்சிதமாக முடித்ததாக தகவல்கள் வருகின்றன.

பயோமெட்ரிக் லாக்கர் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, போயஸ் கார்டன் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தாலும், பணம் இருக்கும் ரகசிய அறையில் சசிகலாவால் நுழைய முடியவில்லை. கால்கள் வெட்டி எடுப்பா? அந்த பாதாள அறையின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் விரல் ரேகைகள் மூலம் பயோமெட்ரிக் முறையில் லாக் செய்யப்பட்டிருந்தது.

இதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகைகள் தேவை. அதானல் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுக்க சசிகலா உத்தரவிட்டார் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்காங்கே பதுக்கல் பணம், நகைகள் கொடநாடு பங்களா, சிறுதாவூர் பங்களாவில் பதுக்கப்பட்டதாகவும், போயஸ் தோட்டத்து பாதாள அறையில் இருந்த அத்தனையும் துடைத்து எடுக்கப்பட்டு கண்டெய்னர்கள் மூலம் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதற்கு மூளையாக செயல்பட்டது தினகரன் தான் எனவும் இப்போது தகவல் பரவி வருவதாகவும் பொன்னையன் பேசினார். கொடநாடு மர்மம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த மரணத்தில் உள்ள மர்மங்களை தெரிவிக்க அரசு மவுனம் சாதிக்கிறது. விரைவில் போலீசார் கண்டு பிடித்து அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சி. பொன்னையன் கேட்டுக்கொண்டார்.

கால்கள் வெட்டப்பட்டது உண்மையா? ஜெயலலிதா மரணமடைந்த போதே அவரது கால்கள் வெட்டப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதனை மருத்துவர்கள் மறுத்தனர். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம், சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியே ரிலீஸ் செய்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.