மஹிந்த அன்று எனக்கு செய்த கொடுமை! மனம் குமுறும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவினால் முன்னாள் ஜனாதிபதியாக தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை எவ்வித நியாயமான காரணம் இன்றியும், முன் அறிவிப்பின்றியும் முழுமையாக நீக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக 40 பேர் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டனர்.

சமகால அரசாங்கத்தினால் மேலதிகமாக 8 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக தனக்கு 48 பாதுகாப்பு அதிகாரிகளே உள்ளதாக சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் தனக்கான பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விசனம் வெளியிட்டு வருகிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைவருக்கும் சமமான வரப்பிரசாதங்கள் கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.