முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அலுவலம், தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கைக்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமைக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சர் மனோ கணேசனின் அனுசரனையுடன் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த நகலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தமை வரலாற்று ரீதியான வெற்றி என்று சந்திரிக்காவின் தேசிய ஒற்றுமைக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அலுவலகத்தின் தலைவராக சந்திரிகாவே செயற்படுகிறார். கடந்த 2016 ஆண்டு இலங்கையின் பல்வேறு பொது அமைப்புக்கள் இணைந்து இந்த வரைபை இறுதிப்படுத்தின.
இந்தநிலையில் இது தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணை புரியும் என்று சந்திரிகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.