உலகின் பலமான நாடுகளுக்கு புதிய ராஜாதந்திர தூதுவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கைக்கு முக்கியமான ஐரோப்பாவின் பிரதான நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜேர்மனின் இலங்கைகான தூதுவராக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சியும், பிரான்ஸ் தூதுவராக புத்தி அதாவுத என்பவரையும் பெயரிடுமாறு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பிரான்ஸின் இலங்கை தூதுவர் திலக் ரணவிராஜா மற்றும் ஜேர்மனின் இலங்கை தூதுவரான கருணாதிலக்க அமுனுகமவும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கருணாசேன ஹெட்டிஆராச்சி என்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாடசாலை நண்பர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் மகனான புத்தி அதாவுதவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.