அமைச்சர்களுக்கு மைத்திரி எச்சரிக்கை!

ஒருவரை ஒருவர் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றமை குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வார அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து ஆராயப்பட்டபோதே ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கீழ் புதிய இராணுவப்பிரிவு உருவாக்கம் தொடர்பில் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்கு ஜோன் செனவிரத்ன மறுப்பு வெளியிட்டமையை அடுத்தே இருவருக்கும் இடையில் பிரதிவாதங்கள் தோற்;றம் பெற்றன