எதிர்காலத்தில், மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொட்டாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத்தை தொடர்ந்தும் வழங்குவதாக கூறிய அரசாங்கம், மின் வெட்டை அமுல்படுத்த முயற்சித்து பொதுமக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.