தொழிற்சங்க போராட்டங்களால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது : பிரதமர்

அரசாங்கத்தை கவிழ்ப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதுளைக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு ஹொட்டல் ஒன்றின் கேட்போர் கூடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருடனான சந்திப்பில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் தொழிற்சங்க போராட்டம் நடைபெற்ற போது அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.