இன்றைய ராசி பலன்கள் 09.05.2017

  • மேஷம்

    மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங் கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவு
    களை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதிர்ப்புகள் அடங் கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக் கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத் திட வேண்டாம். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் சோர்வு வந்து விலகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோ தரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.

  • மகரம்

    மகரம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.