அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை, இலங்கையின் கலாச்சார முறைப்படி செயற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை இலங்கை கலாச்சார முறைப்படி செயற்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர் வருகை தந்துள்ளனர்.

அன்றைய தினம் இலங்கை தூதரகத்திற்கு வருகை தந்தவர்களுக்கு நாள் முழுவதும் இலங்கை உணவு மற்றும் குடிபானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சமாக இலங்கையின் தேயிலையும் வழங்கப்பட்டன.

இலங்கையின் பாரம்பரிய இசை, நடனங்கள் மற்றும் நாட்டுபுற விளையாட்டு நிகழ்வுகள் என்பனவும் இலங்கை தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் பார்வையாளர்களை கவரும் வகையில் பல வண்ணத்திலான கலாச்சார ஆடைகளை அணிந்து பலர் கலந்து கொண்டனர்.

தூதரத்திற்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் எழுத்தப்பட்ட தங்கள் பெயர்களை வைத்து கொள்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.