எந்தக் காரணத்திற்காகவும் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது: அஜித் பெரேரா

எந்தக் காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எதிர்வரும் நாட்களில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் குறித்து மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.

எமது அரசாங்கம் எந்தவொரு காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்