இந்திய பிரதமர்களின் அதிக நாட்கள் வெளிநாடு சென்ற பிரதமர் யார் என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியே அதிக நாட்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
2004-2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 80 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது 10 வருட ஆட்சிக் காலத்தில் மொத்தம் 303 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2004ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங், முதல் 3 ஆண்டுகளில் 24 முறை மொத்தம் 96 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
2009-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங், முதல் 3 ஆண்டுகளில் 30 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 118 நாட்கள்.
2005 மற்றும் 2011 ஆண்டுகளில் மன்மோகன் சிங் அதிகபட்சமாக 11 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் 2014-2017 வரை பிரதமர் நரேந்திர மோடி 54 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் 3 வருட ஆட்சிக்காலத்தில் 132 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி அதிகபட்சமாக 27 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற முதல் 3 வருடங்களை கணக்கெடுத்தால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட தற்போதைய பிரதமர் மோடியே அதிக நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.