தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மலை ஏறும் வீரர் ரியான் சீன் டேவி (43). இவர் நேபாளம் வந்து இருந்தார். பின்னர் இமய மலையின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க விரும்பினார்.
எனவே நேபாள அரசிடம் அனுமதி எதுவும் பெறாமல் தனியாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார். அவர் முதல் முகாமில் இருந்து 6400 மீட்டர் உயரத்தில் உள்ள 2-வது முகாமுக்கு ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வெளிநாட்டினர் இமய மலையில் ஏற நேபாள அரசுக்கு ரூ.7½ லட்சம் பணம் செலுத்த வேண்டும். அதை இவர் செலுத்தவில்லை. மலை ஏற அனுமதியும் பெறவில்லை.
எனவே அவருக்கு 2 மடங்காக ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் 5 ஆண்டுகள் நேபாளம் வரவும் தடை விதிக்கப்படும். அல்லது இமயமலையில் ஏற அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கவும் சட்டத்தில் வழி உள்ளது.