தென் கொரியா அதிபர் ஆகிறார் மூன் ஜே-இன்: கருத்துக் கணிப்பில் தகவல்

தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தென் கொரியாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 300 வாக்குப் பதிவு மையங்களில் 89 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் மூன் ஜே-இன் மற்றும் அன்-சீயோல்-சூ களத்தில் உள்ளனர்.
வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவின் மூன்று முக்கிய செய்தி நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியானது.
அதன்படி, மூன்-க்கு 41.4 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். கன்சர்வேட்டிவ் கட்சியின் ஹாங் ஜூன்-பையோ மற்றும் செண்ட்ரிஸ்ட் கட்சியின் சியோல் – சூ முறையே 23.3 சதவீதம் மற்றும் 21.8 சதவீதம் வாக்கும் கிடைக்கும்.
மூன் ஜே-இன் வெற்றி தென் கொரியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டும் கூறப்படுகிறது.