சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இம்முறை இலங்கையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு வெளிநாட்டு அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் மேலும் பலர் வரவுள்ளனர்.
குறித்த தலைவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெசாக் நிகழ்வுக்கான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வெசாக் கொண்டாடும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எவ்வித அலங்கரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இன்று மாலை ஆறு மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளமை குறுிப்பிடத்தக்கது.