தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது தொகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரில் உப்புதண்ணீர் கலப்படம் செய்து விநியோகிக்கப்படுவதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதிக்கு சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டார்.
அப்போது, மூதாட்டி ஒருவர் தாங்கள் குடிக்கும் நீரை செம்பில் கொண்டு வந்து கொடுக்க, அதை ஓ.பி.எஸ்.-ம் வாங்கி குடித்து பார்த்த போது உப்புத் தண்ணியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அதிரடியாக அதிகாரிகளுடன் அவசர ஆய்வுக் கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் சுத்திகரிப்பிற்கு பின் நல்லா இருக்குமே தவிர உப்புத்தண்ணி மாதிரியெல்லாம் இருக்காது.
ஆனால் இப்ப அந்த குடிதண்ணீர் ஏன் உப்புத்தண்ணீர் மாதிரி இருக்கு அதில் ஏதும் உப்புத்தண்ணியை கலந்துவிடுகிறார்களா என்பதை பாருங்கள் நகரில் உள்ள மக்களும் கூட நல்ல தண்ணீரில் உப்புத்தண்ணீரை கலந்துதான் விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அதை உடனே நீங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இனிமேல் இது போல் தவறுகள் ஏதும் நடக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இப்போது மழை இல்லாததால் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. அதனால், தண்ணீரோடு 60 சதவிகிதம் உப்புத்தண்ணியும் கலந்து தான் கலப்பட தண்ணீராக பொதுமக்களுக்கு கொடுத்துவருகிறார்கள் என தெரியவந்துள்ளது.