சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் இல்லையா? அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் வரும் 12-ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த கூட்டத்தில் தேர்தல் சீர்திருத்தம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்டு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த பட்டியலில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற இடத்தில், பெயர் குறிப்பிடப்படவில்லை. கட்சியியலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஆனால், அந்த நியமனம் செல்லாது என்று, பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளது. இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.